நாட்டை வழிநடத்தும் அடிப்படைச் சட்டம்
நம் நாடு எந்த விதிகளின்படி இயங்குகிறது? அதிகாரம் யார் கையில்? சிறு சிறு படிகளாகப் புரிந்துகொள்வோம்.
ஒரு வரியில்:நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்பு தீர்மானிக்கிறது.
1215
இங்கிலாந்தில் மகாசாசனம்
1789
பிரெஞ்சுப் புரட்சி: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
1946
இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை அமைந்தது
1950
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது
அரசியலமைப்பு என்ற எண்ணம் முதலில் உருவான நாடு எது?
அரசியலமைப்பு = நாட்டின் அடிப்படைச் சட்டம்
அரசியலமைப்பு எண்ணம் முதலில் — அமெரிக்கா
அதிகாரம் மூன்றாகப் பிரிகிறது: சட்டமன்றம் · நிர்வாகம் · நீதித்துறை
நடுவண் – மாநில அதிகாரப் பகிர்வையும் அரசியலமைப்பே வரையறுக்கிறது
மக்களாட்சி நாடுகள் அனைத்தும் அரசியலமைப்பின்படி ஆளப்படுகின்றன
சட்டமன்றம் சட்டத்தை உருவாக்குகிறது, நிர்வாகம் அதைச் செயல்படுத்துகிறது, நீதித்துறை அது சரியா என்று சரிபார்க்கிறது.
| அம்சம் | எழுதப்பட்டது | எழுதப்படாதது |
|---|---|---|
| எடுத்துக்காட்டு | இந்தியா, அமெரிக்கா | பிரிட்டன் |
| வடிவம் | ஒரே ஆவணம் | மரபுகள், பல தனிச் சட்டங்கள் |
| மாற்றுவது | வரையறுத்த நடைமுறைப்படி | நடைமுறையில் மெல்ல மாறும் |
கிரிக்கெட் விளையாட விதிகள் வேண்டும்; நாட்டை நடத்தவும் விதிகள் வேண்டும். அந்த விதிநூல்தான் அரசியலமைப்பு!
தமிழ்ப் பாடநூல் அரசியலமைப்பை முன்னேற்றத்தின் அச்சாணி என்கிறது; ஆங்கில நூல் அதை “vehicle” என்கிறது.
புரிந்ததா? அடுத்த படிக்குச் செல்வோமா?
TNPSC Mock Test ஒரு தனியார் கற்றல் தளம்; TNPSC அல்லது தமிழ்நாடு அரசுடன் தொடர்புடையது அல்ல. தகவல்கள் சமச்சீர் பாடநூல்களை அடிப்படையாகக் கொண்டவை; சொற்றொடர்கள் எங்களுடையவை.